ஸ்ரீசைலம் நீர்மின் உற்பத்தி மையத்தில் தீ விபத்து..! ஒன்பது பேர் உயிரிழப்பு..! மீட்புப் பணிகள் தீவிரம்..!

21 August 2020, 6:32 pm
Srisailam_Fire_UpdateNews360
Quick Share

தெலுங்கானா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக இன்று காலை, இரண்டு உதவி பொறியாளர்களின் உடல்கள் மீட்புக் குழுக்களால் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

சூர்யாபேட்டைச் சேர்ந்த உதவி பொறியாளர் சுந்தர் நாயக்கின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஷர்மன் தெரிவித்தார். மற்ற உடல்களை உதவி பொறியாளர்களான மோகன் குமார், உஸ்மா பாத்திமா மற்றும் சுந்தர், பிரதேச பொறியாளர் சீனிவாஸ் கவுட் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷனில் பணியாற்றும் மகேஷ் ஆகியோரின் உடல்கள் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மற்றும் தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) உள்ளிட்ட மீட்புப் படையினர் சடலங்களை மீட்டெடுக்க தடிமனான புகையை எதிர்த்துப் போராடி வந்தனர். ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தெலுங்கானா-ஆந்திரப் பிரதேச எல்லையில் நிலத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் இடது கரையிலுள்ள நீர்மின் நிலையத்தில் ஒன்பது பேர் சிக்கினர்.

சார்ட் சர்க்கியூட்டினால் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட 30 பேரில் 15 பேர் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பாகத் தப்பினர். ஆறு பேர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீ அணைக்கப்பட்டாலும், தடிமனான புகை மின் நிலையம் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மூழ்கி, மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது.

ஆறு பேர் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 0 View

0

0