‘The Kashmir Files’படம் பார்க்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு அரைநாள் லீவு : அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு..!!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 1:30 pm

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை அளித்து அசாம் அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படம் வெளியானது. காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீரில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் நடித்த அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோரை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், இந்தப் படத்தை பார்த்துவிட்டு அழுததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்ப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை அளித்து அசாம் அரசு அறிவித்துள்ளது. இந்த அரைநாள் விடுப்பு தேவைப்படுவோம், அவரவர் உயர் அதிகாரிகளிடம் சினிமா டிக்கெட் நகலை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!