ஓட்டு இயந்திரத்தை குறை கூறுவதை நிறுத்துங்கள் : காங்கிரஸ் கட்சிக்கு கார்த்தி சிதம்பரம் ட்வீட்!!

10 November 2020, 6:57 pm
Karthi Chidambaram - Updatenews360
Quick Share

தேர்தலில் தோற்றால் ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்த வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பதில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் முற்பகலுக்கு மேல் பாஜக கூட்டணி பெரும்பான்மையை தாண்டி தனிப்பெரும் கட்சியாக உருவாக வாய்ப்புள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.

பாஜக 73 இடங்களில் முன்னிலையில் உள்ளன. கூட்டணி கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளம் 41 இடங்களிலும், மகா கூட்டணி அணியான ராஷ்டிரிய ஜனதா தளம் 76 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் முன்னணி பெற்றுள்ளன.

காலையில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில், பாஜக கூட்டணி முன்னிலை பெற்றதால் ஒட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக வதந்தி பரவியயது. காங்கிரஸ் கட்சி தலைவர் உதித் ராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் செயற்கை கோள் வழியாக ஒட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட ஓட்டு இயந்திரம் பயன்படுத்தியிருந்தால், டிரம்ப் தோற்றிருக்க மாட்டார் என்றும், செயற்கை கோள்களை தரையில் இருந்து கட்டுப்படுத்த முடியும் போது ஓட்டு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது என்றும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கார்த்தி சிதம்பரம், ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டிய நேரம். தேர்தலில் தோற்கும் போதெல்லாம் ஓட்டு இயந்திரங்களை காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஓட்டு இயந்திரங்கள் நம்பகமான துல்லியத்ன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

Views: - 27

0

0