திருப்பதி கோவில் முன் உள்ள கடையில் தீ விபத்து : அடுத்தடுத்து 6 கடைகள் எரிந்து நாசம்!!

4 May 2021, 10:48 am
Tirupati Fire -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் உள்ள கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அடுத்தடுத்து 6 கடைகளில் தீ பரவியது.

திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

அந்த கடையில் ஏற்பட்ட தீ மளமளவென 6 கடைகளுக்கு பரவியதால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தது. திருமலை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

பக்தர்கள் வருகை இன்றி திருப்பதி மலையில் உள்ள வியாபாரிகள் வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், தீ விபத்துக்கு உள்ளான கடைகளின் உரிமையாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Views: - 73

0

0