“ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்”..! அனைவரும் வாக்களிக்க மோடி அழைப்பு..!

3 November 2020, 10:36 am
Modi_Calls_for_Maximum_Voting_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதிலுமிருந்து வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். 10 மாநிலங்களில் 54 சட்டமன்ற இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடங்கியது. 

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தேர்தல் நடக்கும் இடங்களில் வாக்களிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“இன்று, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த இடங்களில் வாக்களிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயக விழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 28, குஜராத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 7, ஒடிசா, நாகாலாந்து, கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் தலா 2 இடங்கள் மற்றும் சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய இடங்களில் தலா ஒரு இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் நாகாலாந்து தவிர மற்ற மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை தொடரும். இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் மாறுபட்டிருக்கும். மேலும் கொரோனா தொற்று உள்ளவர்கள் கடைசி மணி நேரத்தில் தனித்தனியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் நவம்பர் 10’ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Views: - 20

0

0

1 thought on ““ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்”..! அனைவரும் வாக்களிக்க மோடி அழைப்பு..!

Comments are closed.