ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும்..! டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா வலியுறுத்தல்..!

4 May 2021, 8:55 pm
Lockdown_UpdateNews360
Quick Share

கொரோனா நெருக்கடியின் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்த இந்தியா கடுமையாக முயன்று வரும் நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா ஊரடங்கு தான் ஒரே தீர்வு என வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேகமெடுக்கத் தொடங்கிய கொரோனா முதல் அலை செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் உச்சம் பெற்று, பின்னர் டிசம்பர் முதல் படிப்பபடியாக குறைய ஆரம்பித்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு பெருமளவில் கட்டுக்குள் வந்தது.
ஆனால் பின்னர் திடீரென மார்ச் மாதத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி, மிக விரைவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றால், டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது.

இதனால் கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, கொரோனா வைரஸ் பாதிப்பு நேர்மறை விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் அல்லது படுக்கை வசதி 60 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் டாக்டர் குலேரியா, “கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் அல்லது படுக்கை வசதி 60 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் கடுமையான பிராந்திய ஊரடங்கை விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா பணிக்குழுவும் இதற்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் உள்ளது. ஆனால் அது கண்டிப்பாக செயல்படுத்தப்படவில்லை.” என்று கூறினார்.

Views: - 98

0

0

Leave a Reply