மாடுகளை வெட்ட தடை…50 பேருக்கு மேல் கூட கூடாது: உ.பி.யில் பக்ரீத் கொண்டாட கடும் கட்டுப்பாடுகள்..!!

20 July 2021, 12:19 pm
Quick Share

உத்தரபிரதேசம்: பக்ரீத் கொண்டாட்டத்தின் போது குர்பனிக்காக மாடுகள், ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா 3வது அலை எப்போது வேண்டுமானாலும் பரவலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Yogi_Adithyanath_UpdateNews360

இதையடுத்து அதிக அளவிலான கூட்டம் சேரும் பண்டிகை மற்றும் திருவிழாவிற்கு பல மாநிலங்களில் தடை தொடர்கிறது. இந்நிலையில் இஸ்லாமியார்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட கூடாது என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். மேலும் குர்பானிக்காக மாடு மற்றும் ஒட்டகங்களை பலியிட கூடாது என்றும் அறிவித்துள்ளார். இதனிடையே கேரளாவில் பக்ரீத் பண்டியை முன்னிட்டு 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளது.

கேரள அரசின் முடிவிற்கு இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 137

1

0