பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..!!

27 January 2021, 3:27 pm
ganguly - updatenews360
Quick Share

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கடந்த 2ம் தேதி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான மாரடைப்பு ஏற்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, சில தினங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார்.

இந்நிலையில், கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Views: - 0

0

0