BJP முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்.. விடுமுறை அறிவித்த CONGRESS அரசு!

Author: Udayachandran RadhaKrishnan
30 ஏப்ரல் 2024, 8:59 காலை
Congress
Quick Share

BJP முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்.. விடுமுறை அறிவித்த CONGRESS அரசு!

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத் (வயது 77). வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான பிரசாத்தின் மறைவை அடுத்து, மைசூரு மற்றும் சாமராஜ்நகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறும்போது, எம்.பி. பிரசாத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு ஒரு நாள் விடுமுறையை அறிவிக்கிறது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கூறினார்.

மேலும் படிக்க: பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை திறந்து பார்த்த போது SHOCK : 3 சடலங்கள் மீட்பு..!

மறைந்த எம்.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்து கொண்டார். ஜனதா கட்சி மற்றும் காங்கிரசில் இருந்தபோது, சித்தராமையாவுடன் பிரசாத் ஒன்றாக பணியாற்றி உள்ளார்.

எனினும், சித்தராமையாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கால், 2018-ல் சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் பிரசாத் இணைந்து விட்டார். எனினும், இவர்கள் இருவரும் சமீபத்தில் மைசூரு நகரில் நேரில் சந்தித்து கொண்டனர்.

அப்போது, நடப்பு அரசியல் சூழல் பற்றி ஆலோசித்தனர். பிரசாத்தின் மறைவையொட்டி பிரதமர் மோடியும் நேற்று தன்னுடைய இரங்கல்களை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்து கொண்டார்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 258

    0

    0