நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : GPS கருவிகள், வலைகள் திருட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 9:29 am
Nagai
Quick Share

நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : GPS கருவிகள், வலைகள் திருட்டு!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி கடற்கொள்ளையர்கள் வலைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் நகையை சேர்ந்த முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனவர்களை கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜிபிஎஸ் (GPS) கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

p> மேலும் படிக்க: கோவை அருகே பயங்கர தீ… மளமளவென பற்றியதால் 50 குடிசைகள் எரிந்து நாசம் : தவிக்கும் மக்கள்!

மீனவர்கள் படகுகளை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 370

0

0