அடுக்குமாடி வீட்டில் திடீர் தீவிபத்து: தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்…டெல்லியில் சோகம்..!!

Author: Aarthi Sivakumar
26 October 2021, 9:24 am
Quick Share

டெல்லி: டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், வீட்டின் 3வது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்ட வீடு உள்ள பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.

ஆனால், தீயணைப்பு வருவதற்கு முன்னர் வீட்டின் 3வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 233

0

0