டெல்லி – டேராடூன் நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ்: ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து..!!

Author: Aarthi Sivakumar
13 March 2021, 3:50 pm
train fir - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரசில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல இந்த சேவை தொடர்ந்தது. பின்னர் குறிப்பிட்ட அளவில் எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கன்ஸ்ரூ பகுதியருகே இன்று வந்தபொழுது, அதன் சி4 பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், ரெயிலில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். இதன்பின்பு ரயில் நிறுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த தீ விபத்து பற்றி உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் கூறும்பொழுது, மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. அனைத்து பயணிகளும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு விட்டனர். தீ விபத்தினால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்டியில் பிடித்த தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 70

0

0