சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மருத்துவர்கள் கூறிய தகவல்!!

20 January 2021, 5:23 pm
Sasikala Admit- Updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அபராத தொகையை சசிகலா செலுத்திய நிலையில், அவருடைய தண்டனை காலம் வரும் 27ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாக வரும் 27ஆம் தேதி வெளியாகிறார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சிறைக்கு மருத்துவக்குழு விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சசிகலாவுக்கு நீரிழிவு நோய், மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் உடல்நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0