விசாகப்பட்டினம் கடற்கரையில் 200 மீட்டர் தூரத்திற்கு திடீர் நிலச்சரிவு : கடல் கொந்தளித்த அதிர்வால் பயங்கர சேதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 7:20 pm
Vizhag Lanslide - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஜாவத் புயல், அதன் விளைவாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு ஆகியவற்றின் காரணமாக விசாகப்பட்டினம் கடற்கரையில் 200 மீட்டர் தூரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

ஜாவத் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் விசாகப்பட்டினம் அருகே கடற்கரையில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது . இதனால் ராட்சத அலைகள் கடலிலிருந்து பார்ப்போரை அச்சப்படுத்தியது.

அப்போது விசாகப்பட்டினத்தில் திடீரென கடற்கரையை ஒட்டி உள்ள சிறுவர் பூங்காவில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. கடற்கரையோரங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டன.

இதனால் கடற்கரையில் 200 மீட்டருக்கு நில அரிப்பு ஏற்பட்டு, சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பூங்காவிற்கு செல்லும் சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Views: - 314

0

0