ரயில் பெட்டிகள் போல வானில் திடீரென தோன்றிய விநோத வெளிச்சம்: வியந்து பார்த்த பஞ்சாப் மக்கள்..!!

Author: Aarthi Sivakumar
4 December 2021, 4:13 pm
Quick Share

சண்டிகர்: பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் ரயில் போன்ற தோற்றத்தில் பிரகாசமான விநோத விளக்குகள் வானில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பஞ்சாபின் பதான்கோட்டில் நேற்று இரவு வானில் வெள்ளை நிறத்தில் விநோதமான விளக்குகள் தோன்றின. அது ரயிலை போன்ற தோற்றத்துடன் மிக பிரககாசமாக ஒளிர்ந்ததுடன், வேகமாக நகர்ந்து சென்றதாக அதை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 5 நிமிடங்கள் பார்வைக்கு தென்பட்ட அந்த விநோத வெளிச்சம் சட்டென்று மறைந்ததாக கூறப்படுகிறது. குஜராத்தின் ஜுனாகத் பகுதியில் இந்த ஆண்டு துவக்கத்தில் இதே போன்ற விநோத விளக்குகள் வானில் ஒளிர்ந்தது.

பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகே செயற்கைகோள்கள் சுற்றி வரும்போது, இது போன்ற வெளிச்சம் தென்பட வாயப்புள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், இதனை பார்த்த மக்கள், இது என்னவென்று தெரியாமல் மக்கள் சற்று பீதியடைந்தனர்.

Views: - 236

0

0