சூப்பர் ஹீரோ சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை சோதனை : அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Author: Babu Lakshmanan
15 September 2021, 4:31 pm
sonu sood - updatenews360
Quick Share

பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகளால் இந்தியாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் சோனு சூட். இதைத் தொடர்ந்து, ஏழை குடும்பத்தினருக்கான கல்வி உதவி, விவசாய குடும்பத்திற்கு உதவி என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரது உதவும் மனப்பான்மையை அறிந்த பொதுமக்கள், அவரது வீட்டை ஒரு அரசு அலுவலகம் போல நினைத்து, தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி நாள்தோறும் கொடுத்து வருகின்றனர். அதனைப் பெற்று வரும் நடிகர் சோனு சூட்டும் தன்னால் முடிந்த செய்து வருகிறார்.

அவரது இந்த செயலை பாராட்டி, ஐக்கிய நாடுகளின் சபை கூட, சிறந்த மனிதநேயமிக்க விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடிகர் சோனு சூட் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 313

0

0