தூய்மை பணியாளரை லாட்ஜூக்கு அழைத்த சூப்பர்வைசர்: சுற்றிவளைத்து ‘செருப்படி’ கொடுத்த பெண்கள்…!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
9 October 2021, 5:17 pm
Quick Share

திருப்பதி: ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்யும் பெண்ணை லாட்ஜுக்கு அழைத்த சூப்பர்வைசருக்கு செருப்படி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை தனியார் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அங்கு ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு சூப்பர்வைசராக குணசேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு வேண்டியவர்களுக்கு சுலபமான வேலை அளிப்பதும், தன்னிடம் அடிபணியாதவர்களுக்கு கடினமான வேலையும் கொடுத்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் சுசீலா என்பவருக்கு தொடர்ந்து குணசேகரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று குணசேகர் சுசீலாவுக்கு போன் செய்து திருச்சானூர் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து வைத்துள்ளதாகவும் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துள்ளார்.

சுசீலாவும் அதற்கு ஒப்புக் கொண்டது போல பேசி திருப்பதியில் உள்ள மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்து அவர்களையும் அழைத்துக்கொண்டு திருச்சானூரில் உள்ள ஓட்டல் அறைக்கு சென்றனர். அப்போது அங்கு காத்திருந்த பெண்கள் குணசேகரை கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கையை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று மகளிர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Views: - 660

0

0