சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான்..! உறுதி செய்தது எய்ம்ஸ் மருத்துவக் குழு..!

By: Sekar
3 October 2020, 1:07 pm
Sushant_Singh_Rajput_Updatenews360
Quick Share

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் எய்ம்ஸ் தடயவியல் குழு தனது இறுதி அறிக்கையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) சமர்ப்பித்த பின்னர், சிபிஐ கொலை குறித்த கோட்பாடுகளை நிராகரித்துள்ளது. 

மறைந்த நடிகர் சுஷாந்தின் குடும்பத்தினரும் அவர்களது வழக்கறிஞரும் சுஷாந்தின் கழுத்தை நெரித்த அடையாளங்கள் இருந்ததாகவும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தாலும், எய்ம்ஸ் அறிக்கை கோட்பாடுகளை நிராகரித்து இதை தற்கொலை வழக்கு என்று கூறியுள்ளது. எய்ம்ஸ் குழு தனது பரிசோதனையை முடித்து, கோப்பை மூடுவதற்கு முன்பு அனைத்து மருத்துவ-சட்ட அம்சங்களையும் ஆராய்ந்து, இது தற்கொலை வழக்கு என்று கூறியது. 

இப்போது, ​​சிபிஐ தற்கொலைக்குத் தூண்டுதல் எனும் கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தனது முதல் எஃப்.ஐ.ஆரில் தற்கொலைக்குத் தூண்டியதாகவே குற்றம் சாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ கூறியது. இருப்பினும், விசாரணையின் போது, ​​ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால், கொலைக் குற்றச்சாட்டும் சேர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எய்ம்ஸ் தடயவியல் துறை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் விஷம் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தை நிராகரித்தது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பு நேரம் இல்லாதது குறித்து குழு கேள்வி எழுப்பியதோடு, கூப்பர் மருத்துவமனை குறித்து சந்தேகம் கிளப்பியது.

இதற்கிடையில், டாக்டர் சுதிர் குப்தா ஒரு அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவ வாரியம் இந்த வழக்கில் சிபிஐக்கு மிக தெளிவாகவும், உறுதியாகவும் மருத்துவ-சட்ட இறுதி கருத்தை வெளிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 35

0

0