“வேணும்னா ஆன்லைனில் விசாரிங்க”..! பீகார் போலீசை வெளியே விட மறுப்பு..! மும்பை மாநகராட்சி அதிரடி..!

6 August 2020, 11:31 am
Sushant_Singh_Rajput_Updatenews360
Quick Share

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கின் சமீபத்திய அதிரடியாக, பீகார் காவல்துறை சார்பாக வழக்கை விசாரித்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி வினய் குமார் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வர அனுமதிக்க மாட்டோம் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வேண்டுமானால் வினய் குமார் விசாரணையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடியும் என்று மாநகராட்சிதெரிவித்துள்ளது.

மும்பையில் வினய் குமாரின் தனிமைப்படுத்தல் தொடர்பாக மும்பை கூடுதல் நகராட்சி ஆணையர் ஆகஸ்ட் 4’ஆம் தேதி பாட்னாஐஜி’க்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், “மகாராஷ்டிரா அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜூம்/கூகுள் மீட்/ஜியோ மீட் போன்ற டிஜிட்டல் தளங்களில் அல்லது அத்தகைய பிற தளங்களில் தொடர்பு கொள்ள முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகராட்சிபீகார் காவல்துறையின் மற்ற நான்கு காவல்துறை அதிகாரிகளையும் தனிமைப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மும்பை காவல்துறை விசாரணையைத் தொடர வேண்டும் என்று விரும்பும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பை மாநகராட்சிசெயல்படுகிறது. மும்பை காவல்துறை, சுஷாந்த் மரணம் குறித்து இன்னும் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை மற்றும் ‘தற்செயலான மரணம்’ எனும் அடிப்படையிலேயே வழக்கை விசாரித்து வருகிறது.

இதற்கிடையே சுஷாந்தின் தந்தையின் புகாரின் அடிப்படையில் பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து, பீகார் காவல்துறையைச் சேர்ந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் மும்பையில் இந்த வழக்கை விசாரித்து வருவது  குறிப்பிடத்தக்கது.