இந்தூர் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம்..! தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு..!

20 August 2020, 12:55 pm
Indore_UpdateNews360
Quick Share

ஸ்வச் சர்வேக்ஷன் 2020 கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம், இந்தியாவின் தூய்மையான நகரமாக நான்காவது முறையாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.

குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்தன. மத்திய அரசின் தூய்மை கணக்கெடுப்பில் ‘சிறந்த கங்கா நகரம்’ எனும் விருதுக்கு வாரணாசி தேர்வு செய்யப்பட்ட்டுள்ளது.

முடிவுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரு விழாவில் அறிவித்தார்.

இது 2016 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஐந்தாவது பதிப்பாகும். கணக்கெடுப்பின் முதல் பதிப்பில் மைசூரு இந்தியாவின் தூய்மையான நகரத்திற்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஊடகங்களுடன் நேற்று பேசிய இந்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதிபா பால், “எங்கள் கடின உழைப்பாளிகளான சுகாதாரத் தொழிலாளர்கள், விழிப்புணர்வுள்ள குடிமக்கள் மற்றும் இந்தூரின் மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன், தூய்மை கணக்கெடுப்பில் முதல் இடத்தைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும், தூய்மையின் அடிப்படையில் முதலிடத்தைத் தக்க வைப்போம் எனும் எங்கள் முழக்கம் உண்மையாக மாறும்.” என்று தெரிவித்திருந்தார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பில் நாட்டின் 4,242 நகரங்களில் மொத்தம் 1.9 கோடி குடிமக்கள் பங்கேற்றனர்.

Views: - 50

0

0