ரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க? இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 6:00 pm
Rusk Shock Video -Updatenews360
Quick Share

ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்க் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ரஸ்குகளை பேக் செய்யும் போது ஊழியர் ஒருவர் தரையில் வைக்கப்பட்டுள்ள தட்டில் ரஸ்ககளை வைத்து அதை தனது காலால் மிதித்து பாக்கெட்டில் அடைக்கும் போது நாக்கால் நக்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேண்டுமென்றே தொழிலாளி இந்த காரியத்தை செய்ததை போல தெரிகிறது. மக்கள் நம்பி வாங்கும் உணவு பொருளை அசுத்தமான முறையில் கையாண்ட ஊழியரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பானிபூரியை தொடர்ந்து ரஸ்க் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் இனி ரிஸ்கே வந்தாலும் ரஸ்க் சாப்பிட கூடாது என விமர்சித்து வருகின்றனர்.

Views: - 210

0

0