செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 4:54 pm
Rosewood Smuggling -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருப்பதியை அடுத்த ஹரிதா காலனி, கரங்கம்பாடி போன்ற இடங்களில் செம்மரம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 3 தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் மூன்று இடங்களிலிருந்து 32 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை சுமந்து வந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் 3 பேர் இப்படிப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதில் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.

மேலும் மூவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உள்ளனர்.

இது குறித்து பேசிய செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ஒரு கோடி மதிப்பிலான முப்பத்தி இரண்டு செம்மரக்கட்டைகள் பிடித்திருப்பதாகவும் தப்பித்து ஓடியவர்களை இரண்டு தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

Views: - 188

0

0