புதிய கண்டுபிடிப்புகளுக்கான ‘நிதி ஆயோக் பட்டியல்’: 3வது இடத்தை பிடித்து தமிழகம் அசத்தல்..!!

21 January 2021, 1:44 pm
niti ayok - updatenews360
Quick Share

புதுடெல்லி: ‘நிதி ஆயோக்’ நிறுவனத்தின் இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளாவிய புதுமை குறியீடுகளைப் பின்பற்றி இந்தியாவிலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதுமை குறியீட்டுக்கான பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது.

இதன்படி, இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில் முதலிடத்தை கர்நாடகாவும், இரண்டாவது இடத்தை மஹாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை தமிழகமும் பிடித்து உள்ளன.

தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் முறையே, நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீஹார் ஆகிய மாநிலங்கள், கடைசி இடங்களைப் பிடித்து பின்தங்கி உள்ளன.

Views: - 9

0

0