அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

23 January 2021, 10:59 pm
Quick Share

திருப்பதி: அனைவரும் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 2 நாள் சுற்றுப்பயணமாக திருப்பதிக்கு இன்று மதியம் வந்தார். அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர். அதைத்தொடர்ந்து சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு விநாயகரை வழிபட்டபின் பத்திரிக்கையாளரை சந்தித்த அவர் ,மக்கள் அனைவரும் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கி நாளை காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக கூறினார்.

Views: - 0

0

0