இந்து மத உணர்வை புண்படுத்திய வெப் சீரீஸ்களுக்கு எதிராக வழக்கு பதிவு..! மன்னிப்பு கோரிய தயாரிப்பாளர்கள்..!

19 January 2021, 1:09 pm
Mirzapur_Tandav_Web_Series_UpdateNews360
Quick Share

அமேசான் இந்தியாவின் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரீஸ்களில் நடிக்கும் நடிகர்கள் சைஃப் கான் மற்றும் ஜீஷன் அய்யூப் மற்றும் பிறர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தாண்டவ் என்ற வெப் சீரீஸில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் தாண்டவ் வெப் சீரீஸின் தயாரிப்பாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஸ்ட்ரீமிங் தளத்தின் மற்றொரு தொடரான ​மிர்சாபூர் செபி வெப் சீரீஸும் சிக்கலை எதிர்கொள்கிறது.

போலீஸ் வட்டார தகவல்களின்படி, அரவிந்த் சதுர்வேதி எனும் நபர் கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். மிர்சாபூர் எனும் வெப் சீரீஸ் சமூக, மத மற்றும் பிராந்திய உணர்வுகளை புண்படுத்துகிறது மற்றும் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தொடர் தவறான மற்றும் சட்டவிரோத உறவுகளில் கவனம் செலுத்துவதாகவும், மத உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்தியதாகவும் புகார் அளித்தவர் மேலும் கூறியுள்ளார்.

மிர்சாபூரின் எம்.பி.யும், அப்னா தளத்தின் தேசியத் தலைவருமான அனுப்ரியா படேலும் இந்தத் தொடருக்கு எதிராக விசாரணை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரையும் அவர் ட்வீட் செய்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையிலாய் ஞாயிற்றுக்கிழமை இரவு, அமேசான் இந்தியாவின் அபர்ணா புரோஹித், தாண்டவ் வெப் சீரீஸ் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா மெஹ்ரா, எழுத்தாளர் கவுரவ் சோலங்கி மற்றும் சிலருக்கு எதிராக ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

நான்கு உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு மும்பையில் தாண்டவ் தயாரிப்பாளர்களை விசாரிக்கும் என்று துணை போலீஸ் கமிஷனர் சோமன் பர்மா தெரிவித்தார்.

இதற்கிடையில், கத்ரா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் வீர் சிங் அப்பாஜ் மற்றும் நடிகர்கள் சைஃப் அலிகான் மற்றும் ஜீஷன் அய்யூப் ஆகியோருக்கு எதிராக ஷாஜகான்பூரில் மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஆனந்த் தெரிவித்தார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், உத்தரபிரதேச காவல்துறையை மோசமான முறையில் காட்டியதற்காகவும் தாண்டவ் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள ரபுபுரா காவல் நிலையத்தில் இன்று முன்னதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, தாண்டவ் தயாரிப்பாளர்கள் நேற்று மாலை மன்னிப்பு கோரினர். எந்தவொரு தனிநபர், சாதி, சமூகம், இனம் அல்லது மதம் ஆகியவற்றின் உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என அவர்கள் கூறி மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்தத் தொடரில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, முகமது ஜீஷன் அய்யூப், சுனில் க்ரோவர், டிக்மான்ஷு துலியா, டினோ மோரியா, குமுத் மிஸ்ரா, கவுஹர் கான் மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0