அசாம் என்ஆர்சிக்கு வலுவான ஆதரவு..! தருண் கோகோயின் அரசியல் பின்னணி..!

23 November 2020, 9:03 pm
Tarun_Gogoi_UpdateNews360
Quick Share

அசாமில் மூன்று முறை முதல்வராக இருந்த தருண் கோகோய், உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய என்ஆர்சி எனும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அசாமில் நடைமுறைப்படுத்துவதில் தருண் கோகோய் காட்டிய அசாத்திய வலிமை தற்போது நினைவு கூறத்தக்கது.

1971 வங்கதேசப் போருக்கு முன்னும் பின்னும் வங்கதேசத்திலிருந்து அதிக நபர்கள் சட்டவிரோதமாக அசாமிற்குள் நுழைந்தனர். இதனால் அசாமில் போராட்டம் மற்றும் வன்முறைகளால் திணறியது. 

இறுதியில் 1985’இல் ராஜிவ் காந்தி ஆட்சியின்போது, அசாம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 1971’க்கு  முன் அசாமிற்குள் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க, என்ஆர்சி அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் வாக்கு வாங்கி அரசியலால் இது பின்னர் காங்கிரசால் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்நிலையில் 2001 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மயிரிழையில் அசாம் கணபரிசத்தை தோற்கடித்த போது, மாநிலத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் தொடர்ந்து 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தார்.

ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் மாநில அரசியலுக்கு செல்வதற்கு முன் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்தார். கோகோய் இந்திரா காந்தி மற்றும் பின்னர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். மேலும் ஆயுதக் கிளர்ச்சியில் இருந்து அசாமை வெளியேற்றி, மாநிலத்திற்கு அமைதியையும் செழிப்பையும் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.

என்.ஆர்.சி அசாம் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், சி.ஏ.ஏ.வை எதிர்ப்பதற்காக அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞரின் அங்கியை அணிந்தார்.

சிஏஏவைப் போலல்லாமல் அசாம் என்.ஆர்.சி மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை என்று கோகோய் கூறினார், “என் குழந்தையாக இருந்த என்.ஆர்.சி, அசாம் ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த அரசாங்கம் செய்வது போல மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வேறுபாடு காட்டவில்லை.” என அசாம் என்ஆர்சி ஆதரவாக இருந்தார்.

அதே நேரத்தில் அசாம் என்.ஆர்.சி குறித்து சர்ச்சசை வெடித்த போது, காங்கிரஸ் தனது முகத்தை காப்பாற்றிக் கொள்ள, “இது எங்கள் குழந்தை, ஆனால் செயல்படுத்தும் வழி தவறானது” என்று தருண் கோகோய் கூறியது குறிப்பிடத்தக்கது.  

Views: - 0

0

0