டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனர் ஃபாகிர் சந்த் கோஹ்லி உடல்நலக்குறைவால் மரணம்..!

27 November 2020, 8:17 am
Faqir_Chand_Kohli_UpdateNews360
Quick Share

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனர் மற்றும் முதல் தலைமை நிர்வாக அதிகாரியான ஃபாகிர் சந்த் கோஹ்லி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என்று பிரபலமாக அழைக்கப்பட்ட கோஹ்லிக்கு வயது 96.

எஃப்.சி. கோஹ்லி இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக இருந்தார். மேலும் டி.சி.எஸ்’இன் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக 100 பில்லியன் டாலர் ஐ.டி துறையை உருவாக்க நாட்டிற்கு உதவினார். பின்னர், ஒருபோதும் கல்வி கற்காத மக்களுக்கு கற்பிக்க, வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டத்தில் கோஹ்லி பணியாற்றினார்.

விப்ரோ லிமிடெட் நிறுவனர் தலைவர் அசிம் பிரேம்ஜி கூறுகையில், “திரு. கோஹ்லி இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் உண்மையான முன்னோடி. நாங்கள் அனைவரும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறோம். தகவல் தொழில்நுட்பத் துறையிலும், இந்தியாவுக்கும் அவர் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது.” எனப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

“திரு. எஃப் சி கோஹ்லி ஒரு வலுவான டி.சி.எஸ்’க்கு அடித்தளம் அமைத்தார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நாஸ்காம் நிர்வாகக் குழுவில் அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.” என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறினார்.

“இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கான சோகமான நாள். அவர் டி.சி.எஸ்ஸின் முதலாவது தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமல்ல, இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சிக் கதைக்கு அடித்தளம் அமைத்தவர்.” என டெக் மஹிந்திராவின் எம்.டி. குர்னானி ட்வீட் செய்துள்ளார்.

Views: - 26

0

0