சட்டசபை எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்கக் கூடாது..! தேஜஸ்வி யாதவுக்கு கடிவாளம் போட்ட நிதீஷ் கட்சியினர்..!

22 November 2020, 2:36 pm
Tejashwi_UpdateNews360
Quick Share

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஷ்வி யாதவ் மீது பல ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் இருப்பதால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கக் கூடாது எனக் கேள்வியெழுப்பினார்.

ஊழல் மோசடி தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மேவா லால் சவுத்ரி மாநில கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேவலால் சவுத்ரி விவகாரம் :

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. கடந்த திங்களன்று நடந்த பதவிப் பிரமாணத்தின்போது, ஐக்கிய ஜனதா தளத்தின் மேவலால் சவுத்ரியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னர் அவருக்கு கல்வியமைச்சகம் வழங்கப்பட்ட நிலையில், அவர் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் அமைச்சராக இருக்கும் தகுதியற்றவர் எனக் கூறி, அவர் ராஜினாமா செய்ய ஆர்.ஜே.டி. வலியுறுத்தியது.

பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் சவுத்ரி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 2010-15’ஆம் ஆண்டில் அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மேவலால் சவுத்ரி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தேஜஸ்வி யாதவ் :

மேவலால் சவுத்ரி பதவி விலகிய சிறிது நேரத்திலேயே, தேஜஸ்வி யாதவ், அமைச்சரவையில் ஒரு ஊழல் நபரை சேர்த்ததற்காக முதலமைச்சரை தாக்கினார்.

தேஜஸ்வி யாதவ் மீது, ஐபிசி மற்றும் எஸ்.சி / எஸ்.டி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஐக்கிய ஜனதா தளத் தொண்டர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ராகோபூர் சட்டசபை தொகுதியில் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் போது, ​​அவர் பெயரிடப்பட்ட வழக்குகள் குறித்த முழு விவரங்களையும் யாதவ் வெளியிடவில்லை என்றும், வேண்டுமென்றே மறைத்ததை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

Views: - 20

0

0