அனைவரும் கைகோர்ப்போம்… முதலில் இந்த விஷயத்துக்கு ஆதரவு கொடுங்க : ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்

Author: Babu Lakshmanan
25 September 2021, 1:40 pm
Quick Share

சென்னை : சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இருப்பினும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 33 கட்சித் தலைவர்களுக்கு பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவசர கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் பாஜகவுக்கு எதிராக அவைரும் கைகோர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 294

0

0