டோல்கேட்டில் தாறுமாறாக வந்த லாரியால் விபத்து : சிசிடிவி காட்சி!!
14 September 2020, 11:59 amதெலுங்கானா : டோல் பிளாசாவில் பணம் செலுத்துவதற்காக காத்திருந்த கார்கள் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள இண்டல்வாயி டோல் பிளாசா வழியாக நேற்று மாலை
அதிக போக்குவரத்து காணப்பட்டது. இதனால் அந்த டோல் பிளாசாவில் பணம் செலுத்த வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன.
அப்போது ஹைதராபாத்தில் இருந்து நாக்பூர் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அங்கு வந்த நிலையில், பிரேக் பிடிக்காத காரணத்தால் முன்னால் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி தடுப்பு சுவரை உடைத்து கொண்டு நின்றது.
இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் காயமடைந்தனர். டோல் பிளாசா நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
0
0