நாளை முதல் முழு ஊரடங்கு..! கொரோனாவைக் கட்டுப்படுத்த தெலுங்கானா அரசு உத்தரவு..!

11 May 2021, 8:01 pm
Lockdown_UpdateNews360
Quick Share

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நாளை மே 12 முதல் மாநிலத்தில் 10 நாள் ஊரடங்கை விதிப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, நாளை மே 12’ஆம் தேதி காலை 10.00 மணி முதல் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை விதிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

“இருப்பினும், தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் தளர்வு இருக்கும். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய டெண்டர்களை அழைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என்று மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று, மாநிலத்தில் 4,826 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானாவின் மொத்த கொரோனா பாதிப்புகள் அரை மில்லியனைத் தாண்டியது. நேற்று மேலும் 35 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,771 ஆக உள்ளது.

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய டெண்டர்களை அழைக்க அமைச்சரவை முடிவு செய்தது.

முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்னதாக பொருளாதாரத்தை முடக்கி அழிவை ஏற்படுத்தும் என்பதால் ஊரடங்கு விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று கூறியிருந்தார்.
தற்போது, மாநிலத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தெலுங்கானா இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 111

0

0