“ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்க வாருங்கள்”..! அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுத்த பாஜக..!

2 August 2020, 7:57 pm
owaisi_updatenews360
Quick Share

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பூமி பூஜையில் பங்கேற்க தெலுங்கானா பாஜக தலைவரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான கிருஷ்ணா சாகர் ராவ், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“அயோத்தி ராம்ர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அற்புதமான ராமர் கோவில் கட்டுமானத்தைத் தொடங்குவார். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நம் காலத்தில் நனவாக உள்ளது.” என்று ராவ் கூறினார்.

இடதுசாரிகள் மற்றும் ஏஐஎம்ஐஎம் போன்ற அற்பமான குழுக்கள் எழுப்பும் ஆட்சேபனைகள் மிகவும் அற்பமானவை என்றார்.

“இந்த வகையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் யாரும் பதிலளிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அந்த உரிமைக்கு விதிவிலக்கல்ல” என்று அவர் கூறினார்.

“ஆட்சேபனை தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும், அசாதுதீன் ஒவைசியையும் பூமி பூஜையில் பங்கேற்க அழைக்கிறேன். இதனால் அவர்கள் தங்கள் கட்சிகளின் மதச்சார்பற்ற மனப்பான்மையையும் சகோதரத்துவத்தின் மீதான தனிப்பட்ட சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்த முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

“இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி அந்த உரிமைக்கு விதிவிலக்கல்ல. உண்மையில், இந்திய குடிமகனாக தனது சொந்த மத உரிமைகளையும் சடங்குகளையும் செய்ய அவருக்கு வேறு எவரையும் விட அதிக உரிமைகள் உள்ளன.” என ராவ் மேலும் தெரிவித்தார்.

Views: - 0

0

0