பத்திரிகையாளரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காங்கிரசார்..! தெலுங்கானாவில் பயங்கரம்..! (வீடியோ)

Author: Sekar
2 October 2020, 11:23 am
Telangana_ANI_Reporter_Attack_by_Congress_Updatenews360
Quick Share

இந்தியாவில் ஊடகவியலாளர்கள் மீதான மற்றொரு இழிவான தாக்குதலில், தலைவர் ஃபெரோஸ் கான் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் ஏ.என்.ஐ நிருபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

ஹாத்ராஸ் கற்பழிப்பு வழக்கிற்கு எதிரான போராட்டத்தின் போது. இந்த சம்பவம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள டேங்க் பண்ட் பகுதியில் நேற்று நடந்தது.

பல காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அம்பேத்கர் சிலை அருகே கூடியிருந்ததாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் போது தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம்குமார் ரெட்டியும் கலந்து கொண்டார். இந்த பேரணி காந்தி பவனில் இருந்து தொடங்கியது. ஆனால் முன் அனுமதி இல்லாமல் நடைபெற்றதால் காவல்துறையினர் குறுக்கிட்டனர்.

இந்நிலையில் ஏ.என்.ஐ பத்திரிகையாளர் அப்துல் பஷீர் காங்கிரஸ் தலைவர்களை ஒரு பேட்டிக்காக அணுகியபோது, அது ஒரு முக்கிய தலைவரான ஃபெரோஸ் கான் உடன் கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. பின்னர் அந்த பத்திரிகையாளர் கான் மற்றும் அவரது ஆதரவாளர்களால் இரக்கமின்றி தாக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் மற்றும் பிற பத்திரிகையாளர்களால் ஒருவழியாக நிருபர் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வீடியோ கிளிப்பில், ஃபெரோஸ் கான் பத்திரிகையாளரை தாக்குவதைக் காணலாம். விரைவில் அவருடன் மற்ற காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்தனர். பின்னர் அவர்கள் ஏஎன்ஐ நிருபரை உதைத்து, குத்தி மிக மோசமாக நடத்தினர். போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்க முயன்றபோது, அவர்களை காங்கிரஸ் குண்டர்கள் சுற்றி வளைத்து வெளியே தள்ளினர்.

பாலியல் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பத்திரிகையாளரிடம்ஃபெரோஸ் கான் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட நடந்து கொண்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 39

0

0