‘என் கணவன சுட்டுக் கொன்ன இடத்துலயே என்னையும் கொன்னுடுங்க’ : குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி கண்ணீர்..!

6 December 2019, 4:19 pm
hyderabad accust wife - updatenews360
Quick Share

ஐதராபாத் : இளம்பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளிகள் இன்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை என்கவுண்ட்டர் இன்று காலை என்கவுண்ட்டர் செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான கேசவலுவின் மனைவி கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,”ஒரு வருஷத்துக்கு முன்புதான் எங்களுக்கு திருமணமானது. இப்போது, நான் மாசமாக இருக்கின்றேன். என்னுடைய புருஷன் இறந்த இடத்திற்கே என்னையும் அழைத்துச் சென்று சுட்டுக் கொல்லுங்கள்,” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

முன்னதாக, பிரியங்கா ரெட்டியைக் கொன்றது போலவே, சின்ன கேசவலுவை எரித்துக் கொல்ல வேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்தார்.