‘காதலுக்கு எதிர்ப்பு’ மகளை பற்ற வைத்த தீயில் சிக்கி தாயும் பலி..!

21 August 2020, 4:07 pm
Quick Share

தெலங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை மண்ணெண்னை ஊற்றி தீ வைத்து கொளுத்திய தாயும் அதே தீயில் சிக்கி பலியான சம்பலம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஷாத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் கணவர் மற்றும் மகள் ஷ்ராவந்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

ஷ்ராவந்தி அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாய இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பலமுறை அறிவுறை வழங்கியும் ஷ்ராவந்தி தன் முடிவில் இருந்து மாறாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் ஷ்ராவந்தியிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஷ்ராவந்தியின் தந்தை மண்ணெண்னை எடுத்து மகளிடம் கொடுத்து விட்டு ஊற்றிக்கொண்டு செத்துவிடு என கூறியுள்ளார்.

கடும் ஆத்திரத்தில் இருந்த ஷ்ராவந்தியின் தாய் சந்திரலேகா மண்ணெண்னை பாட்டிலை இருந்து பிடுங்கி மகள் ஷ்ராவந்தியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

மண்ணெண்னை சந்திரலேகா மீதும் சிந்தி இருந்ததால் அவர் மீதும் தீ பிடித்து பற்றி எரிந்துள்ளது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆத்திரத்தில் எடுத்த முடிவால் இரு உயிர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 28

0

0