சொத்து வரி வசூலை அதிகரிக்க புதிய வாட்ஸ்அப் சேனல் | இனி அலைய வேண்டிய அவசியமில்லை!
27 February 2021, 12:46 pmதெலுங்கானா அரசாங்கத்தின் CMDA (Commissioner and Director of Municipal Administration) வியாழக்கிழமை அம்மாநிலத்தில் சொத்து வரி வசூலை அதிகரிப்பதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இந்த சேவை இலவசமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும், மேலும் இது பயனர்களுக்கு வரி நிலுவை பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும். இது வரி வசூலிக்கும் செயல்முறையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், மாநிலத்தில் இந்த செயல்முறையை அதிகரிக்கும்.
புதிதாக தொடங்கப்பட்ட சேனலை ‘CDMA, Telangana Property Tax Module’ என்று சி.டி.எம்.ஏ அழைக்கிறது, இது ஒரு தானியங்கி சாட்போட் சேவையாகும். இதன் மூலம் குடிமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வருவதற்குப் பதிலாக வாட்ஸ்அப் அரட்டைகள் மூலம் தங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ள அனுமதிக்கும், இது தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் சமயத்தில் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கு உதவும்.
இந்த சேவையைப் பயன்படுத்துவது எளிது. அனைத்து பயனர்களும் செய்ய வேண்டியது தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கில் cmda வுக்கு ‘Hi’ என்று மெசேஜ் அனுப்புவது மட்டுந்தான். இந்த சேவைக்கான வாட்ஸ்அப் எண் +91 90002 53342 என்பதாகும்.
பயனாளர்கள் இந்த செய்தியை அனுப்பியதும், அவர்கள் சொத்து வரி வசூல் தொடர்பான சேவைகளை எளிதாக அணுக முடியும், இதில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி மூலம் வரி செலுத்தும் முறையும் அடங்கும்.
சாட்போட் தற்போது ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் கிடைக்கிறது என்றும் விரைவில் உருது மொழியும் கூடுதல் மொழியாக சேர்க்க செயல்பட்டு வருவதாகவும் CMDA தெரிவித்துள்ளது.
0
0