ஆணவக் கொலை செய்த ‘என் அம்மா அப்பாவை கைது செய்யுங்கள்‘ : காவல்துறையிடம் கண்ணீர் மல்க மகள் கோரிக்கை!!

26 September 2020, 12:13 pm
Telangana Honor Killing - updatenews360
Quick Share

தெலுங்கானா : கணவனை படுகொலை செய்த தாய், தந்தை, உறவினர்கள் ஆகியோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என காவல்துறையிட்ம் காதல் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சாந்தா நகரை சேர்ந்தவர் ஹேமந்த். அதே பகுதியை சேர்ந்த லட்சுமா ரெட்டி என்பவருடைய மகள் அவந்தி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இவர்களுடைய காதலுக்கு அவந்தி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட இரண்டு பேரும் ஹைதராபாதில் உள்ள கட்ச்பவுளியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மகள் அவந்தி, மருமகன் ஹேமந்த் ஆகியோரை சந்தித்த அவந்தி தந்தை லக்ஷ்மா ரெட்டி, உங்கள் மீது எங்களுக்கு எந்தவிதமான கோபமும் இல்லை. வீட்டுக்கு செல்லலாம் வாருங்கள் என்று நம்பிக்கை வரும் வகையில் பேசி காரில் அழைத்து சென்றார்.

ஆனால் நடுவழியில் லட்சுமா ரெட்டி, அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் ஒன்பதுபேர் ஆகியோர் காரில் இருந்த ஹேமந்த் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி காரில் இருந்து கீழே இறக்கி காதல் மனைவி அவந்தி கண்முன்னே படுகொலை செய்தனர்.

பின்னர் ஹேமந்த் உடலை அருகில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு அவந்தியை மட்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த கூக்கட் போலீசார் விரைந்து சென்று ஹேமந்த் உடலை கைப்பற்றி அவந்தி பெற்றோர் மற்றும் அவருடைய உறவினர்கள் 9 பேர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் அவந்தி பெற்றோர் மற்றும் 9 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கணவனை படுகொலை செய்த தாய், தந்தை, உறவினர்கள் ஆகியோரை கடுமையாக தண்டிக்க மரணம் அடைந்த நபரின் காதல் மனைவி போலீசாரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 10

0

0