தெலங்கானாவில் பயங்கர தீவிபத்து..சென்னையைச் சேர்ந்த இருவர் உள்பட 8 பேர் பலி.. கட்டிடத்தின் மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணிகள்!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 10:53 am

தெலங்கானா ; செகந்திராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.

செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிகல் பைக் ஷோரூம் என்ற பெயரில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பல கோடி மதிப்பிலான மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலாகின.

மேலும், ஷோரூமில் ஏற்பட்ட இந்த தீவிபத்தானது, அந்தக் கட்டிடத்தின் 2வது தளத்தில் உள்ள தனியார் லாட்ஜுக்கும் பரவியது. இரவு நேரம் என்பதால், பலர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தீ விபத்து காரணமாக எழுந்த கரும்புகையில் சிக்கி லாட்ஜில் தங்கி இருந்த பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் உட்பட எட்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த சீதாராமன், பாலாஜி ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்து சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!