ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் : கையும் களவுமாக சிக்கினார்!!

15 August 2020, 11:32 am
Telangana Bribery- Updatenews360
Quick Share

தெலுங்கானா : நில விவகாரத்தில் சாதகமாக செயல்பட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர் .

தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டத்திலுள்ள கீசரா மண்டல தாசில்தார் நாகராஜூ. தாசில்தார் நாகராஜூ ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக செயல்படுவதற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு இருந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்த தெலங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நாகராஜுவின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் சென்றனர். அப்போது நாகராஜூ தன்னுடைய வீட்டில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக வழங்கிய போது கையும் களவுமாக மடக்கிப்பிடித்து அவரை கைது செய்தனர்.

அவருடைய வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது. இதற்கு முன்னரும் கூட லஞ்சம் வாங்கிய வழக்கில் நாகராஜை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 26

0

0