இது எங்க ஏரியா : திருப்பதி மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்த சிறுத்தையால் பதற்றம்!!

9 July 2021, 7:06 pm
Leopard - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி மலைப்பாதையில் சென்ற பக்தர்களை வழிமறித்த சிறுத்தையின் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் துவங்கி திருப்பதி மலையில் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அப்போது முதல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை புலிகள், கரடிகள், மலைப்பாம்புகள் ஆகியவை மலைப்பாதைகள்,திருப்பதி மலையில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் உள்ள பகுதிகள் ஆகியவற்றிற்கு வந்து நடமாட துவங்கின.

அதன் பின்னர் தரிசன அனுமதி பக்தர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது திருமலைக்கு பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையிலும் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் தொடர்கிறது.

நேற்று பக்தர்கள் தங்களுடைய வாகனங்களில் திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை புலி சாலையில் நடந்து சென்ற காட்சியைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாலையில் சிறுத்தை சுற்றிய காட்சிகளை தங்களுடைய செல்போன் கேமராவில் வீடியோ எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 255

8

4