ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து : ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 1:52 pm
Chemical Factory Fire - Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஐதராபாத் பெடம்பர்பேட் பகுதியிலுள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரசாயனம் பற்றி எரிந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பெடம்பர் பேட் பகுதியில் ஏராளமான அளவில் தொழிற்சாலைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. அங்கு உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாக ஏற்பட்டது என்று கருதப்படும் நிலையில் தீ பொறி இருப்பு வைக்கப்பட்டிருக்கும் ரசாயன பொருட்கள் மீது பட்டு பெரும் தீவிபத்து ஆக மாறி அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனம் முழுவதுமாக எரிந்தது.

இதனால் அங்கிருந்து பெருமளவில் கரும்புகை வெளியேறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கரும்புகை சூழ்ந்து கொண்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரங்கள்,மற்றும் தீயணைப்பு வண்டிகள் ஆகியவற்றுடன் விரைந்து சென்று கிடங்கின் சுவரை உடைத்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்டபோது கிடங்கில் யாரும் இல்லை எனவே உயிர் சேதம் ஏற்படவில்லை.

Views: - 196

0

0