குஜராத்தில் பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து: கார், பைக்குகள் எரிந்து நாசம்..!!
Author: Aarthi Sivakumar10 August 2021, 12:48 pm
குஜராத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தாலும், அறை முழுவதும் வைத்திருந்த பட்டாசுகளாலும் 2 கட்டடங்களில் உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென பரவியது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடியும், காற்றின் வேகம் காரணமாக தீ கட்டடத்தை சுற்றிலும் பரவியதால், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
Views: - 247
0
0