காஷ்மீர் பெண் பிரிவினைவாதிக்கு எதிராக பயங்கரவாத ஆதரவு மற்றும் தேசத்துரோக வழக்குப் பதிவு..!

23 February 2021, 3:29 pm
asiya_andeabi_updatenews360
Quick Share

காஷ்மீர் பிரிவினைவாதி மற்றும் துக்தரன்-இ-மில்லத் அமைப்பின் தலைவரான ஆசியா ஆண்ட்ராபி மீது பயங்கரவாத செயல்கள் செய்ய சதி செய்ததாகவும், பாகிஸ்தானின் ஆதரவோடு நாட்டிற்கு எதிராக போரை நடத்தியதாகவும் பயங்கரவாத மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

பிப்ரவரி 20’ஆம் தேதி, ஆண்ட்ராபி மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான சோஃபி ஃபெமீடா மற்றும் நஹிதா நஸ்ரீன் ஆகியோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி பர்வீன் சிங் என்பவரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குற்றவியல் சதி, அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுப்பது, அரசாங்கத்திற்கு எதிராக போரை நடத்த சதி, தேசத்துரோகம், பகைமையை ஊக்குவித்தல், தேசிய ஒருங்கிணைப்புக்கு விரோதமாக நடந்து கொள்ளுதல் போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் ஐபிசியின் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறார்.

பயங்கரவாதக் கும்பலில் உறுப்பினராக இருப்பது, பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது, பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான முயற்சிகள் அல்லது தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளை இது மேலும் உள்ளடக்கியுள்ளது.

ஆண்ட்ராபி தனது மற்ற இரண்டு பெண் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கடுமையாக சீர்குலைக்கும் சதி மற்றும் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மூவரும் 2018’இல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

Leave a Reply