ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு…! ஒருவர் பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்

1 July 2020, 11:02 am
Terrorist_Attack_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரில் 2  மாதங்களாக ஊடுருவல் சம்பவங்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் காரில் இருந்த ஒருவர் பலியானார்.

சிஆர்பிஎப் வீரர்கள் பதிலடியால் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Leave a Reply