காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி பலி : பாதுகாப்பு படையினர் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 1:01 pm
Gun Fight - Updatenews360
Quick Share

காஷ்மீர் : பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு -காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் மஞ்சோவா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மறைந்திருந்த தீவிரபாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.

மஞ்சோவா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவனிடம் இருந்து ஏகே 47 மற்றும் ஒரு துப்பாக்கியையும் பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

Views: - 605

0

0