காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

16 June 2021, 9:52 am
Kashmir_encounter_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நஹுகம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Jammu_Kashmir_Encounter_UpdateNews360

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், ஒரு பயங்கரவாதி சிக்கியுள்ளான்.

தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 12 மணி அளவில் தொடங்கிய என்கவுண்டர் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 198

0

0