காஷ்மீரின் சோபியான் பகுதியில் பதற்றம்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு..!!

11 June 2021, 2:47 pm
Quick Share

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இன்று மதியம் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

Kashmir_Encounter_Terrorists_UpdateNews360

அப்போது, அங்குவந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச்சூடு நடத்தியவுடன் அங்கிருந்து பயங்ரவாதிகள் தப்பிச்சென்றுவிட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அக்லர் பகுதியை சுற்றுவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 145

0

0