ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு..! பாதுகாப்புப் படையினர் இருவர் வீர மரணம்..!

26 November 2020, 4:32 pm
Srinagar_UpdateNews360
Quick Share

பரபரப்பான ஸ்ரீநகர் சந்தையில், இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 

மாருதி காரில் பயணித்த மூன்று பயங்கரவாதிகள், இன்று பிற்பகல் குஷிபோராவின் எச்எம்டி, பொதுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்திர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பட்ட நிலையில், அவர்கள் வீரமரணம் அடைந்து விட்டார்கள்.

மக்கள் நெரிசலான பகுதியாக இருப்பதால், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்புகள் மற்றும் இணை சேதங்கள் ஏற்படாமல் இருக்க வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கார் பாதுகாப்பு படையினரால் துரத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப விசாரணையில் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.” என காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தாக்குதல் நடந்த பகுதியில் பெரிய அளவிலான தேடுதல் வேட்டையை ராணுவம் தொடங்கியுள்ளது. மேலும் சந்தை இருக்கும் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

Views: - 14

0

0