கோழிகளை பிரிய மனமின்றி கதறி அழுத சிறுவன் : கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய க்யூட் வீடியோ!!

2 July 2021, 7:46 pm
Sikkim Boy - Updatenews360
Quick Share

சிக்கிம் : தான் வளர்த்து வந்த கோழிகளை இறைச்சிக் கடைக்கு எடுத்து செல்ல வேண்டாம் என 6 வயது சிறுவன் கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிக்கிமை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோழிகளை வளர்த்து வந்துள்ளான். கோழிகள் மீது அலாதி பிரியம் கொண்ட சிறுவன், கோழிகளை இறைச்சிக கடைக்கு எடுத்து சென்று வெட்டப்படுவதை அறிந்த சிறுவன், தனது கோழிகளை எடுத்து செல்ல வேண்டாம் என கதறி அழுதான்.

இறைச்சி கடைக்கும் கோழிகளை எடுத்து செல்ல வந்தவர் கோழிகளை சாப்பிட போவதாக கூறியதால், கதறி அழுத சிறுவன் ஒரு கட்டத்தில் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிக் கேட்டான்.

தனது கோழிகளை விட்டு விட்டு செல்லுங்கள், என ரோட்டில் புரண்டு அழுத காட்சிகள் காண்போர் இதயத்தை கரைய வைத்துள்ளது. மேலும் சிறுவயதில் சிறுவனின் செயல் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Views: - 150

0

0