ஆன்லைன் கேமில் தோல்வி.. ஆத்திரமடைந்த சிறுவனால் சிறுமிக்கு நேர்ந்த கதி..!
8 September 2020, 1:35 pmஆன்லைன் கேமில் தொடர்ந்து வெற்றி பெற்ற 10 வயது சிறுமியை, 11 வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். சிறுவர், சிறுமிகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். சிலர் விளையாட்டுக்கு அடிமையாகி மன ரீதியாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 11 வயது சிறுவனும், 10 வயது சிறுமியும் ஆன்லைன் கேம் அதிகமாக விளையாடி வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். ஆன்லைன் கேமில் சிறுமி தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கற்களை வைத்து தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் கேம் விபரீதத்தால் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0
0